வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்யலாமா? ஆன்மிக அன்பர்கள் கூறும் விளக்கம்!

 
வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்யலாமா? ஆன்மிக அன்பர்கள் கூறும் விளக்கம்!


வீட்டு பூஜையறையில் பெரும்பாலும் விநாயகர், முருகன், லட்சுமி, பெருமாள், சரஸ்வதி படங்களுடன் குலதெய்வத்தின் படத்தையும் வைத்து கும்பிடுவது வழக்கம். அத்துடன் எங்காவது கோவில்களுக்கு செல்லும் போது அங்கு வாங்கப்படும் சாமிப் படங்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருவோம். அதிலும் சிலருக்கு இஷ்ட தெய்வத்தை வீட்டில் சிலையாக வைத்து வழிபாடு செய்யவேண்டும் என்பது ஆசையாக இருந்து வருகிறது.

வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்யலாமா? ஆன்மிக அன்பர்கள் கூறும் விளக்கம்!

இதனால் பலரும் சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா என சந்தேகங்களும் எழுவதுண்டு.
இந்து சாஸ்திரத்தின் படி இஷ்ட தெய்வத்தின் சிலையை வீட்டில் பிரதிஷ்டை செய்து வணங்கலாம். கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு தினமும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் செய்கிறோம். அந்த அடிப்படையில் வீட்டில் பிரதிஷ்டை செய்யப்படும் ஸ்வாமி சிலைகளுக்கும் செய்ய வேண்டும்.அப்போது தான் அந்த சிலைகளில் உயிரோட்டம் வரும். இல்லை எனில் நம் விருப்ப தெய்வத்தின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொடுத்துவிடும்.


பொதுவாக வீடுகளில் ஆறு அங்குலத்துக்குக் குறைவான விக்ரகங்களை வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் ஆன்மிக பெரியவர்கள்.ஆறு அங்குலத்திற்கு மேல் உள்ள விக்ரகங்களுக்கு தினமும் அபிஷேகம், நைவேத்தியம், ஆராதனை செய்யவேண்டும். ஆறு அங்குலத்துக்கு குறைவான விக்ரகம் என்றால் தினமும் அபிஷேகம் செய்ய தேவையில்லை. வாரத்துக்கு ஒரு முறை மட்டும் கூட அபிஷேகம் செய்துகொள்ளலாம்.

வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்யலாமா? ஆன்மிக அன்பர்கள் கூறும் விளக்கம்!

ஐம்பொன் , தங்கம், வெள்ளி, பித்தளை, தாமிரம், வெண்கலத்தில் செய்த சிலைகளுக்கு தான் இவை பொருந்தும். கல்லினால் ஆன சிலை என்றால் அது ஆறு அங்குலத்துக்குக் கீழ் இருந்தாலும் தினசரி அபிஷேகம், நைவேத்தியம் செய்ய வேண்டும். பழங்கள், பேரீச்சம் பழம், கற்கண்டு, வெறும் சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து எச்சில் படுவதற்கு முன்பு சாமிக்கு வைத்து விடலாம். விக்ரகங்களை வைத்துக்கொண்டு அபிஷேகம், பூஜை, நைவேத்தியம் செய்யவில்லை என்றால் இஷ்ட தெய்வத்தின் சாபத்துக்கு ஆளாக நேரிடலாம்.


அதே போல் வீட்டில் சிலைகளை பிரதிஷ்டை செய்துவிட்டு அதற்கு அபிஷேகம், நைவேத்தியம், விளக்கு கூட ஏற்றாமல் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்று விடக் கூடாது. தினசரி அபிஷேகம், பூஜை போன்றவற்றை செய்ய முடியும் என்று கருதுபவர்கள் மட்டுமே வீட்டில் விக்கரங்களை வைத்து வழிபாடு செய்யலாம். மற்றவர்கள் இஷ்ட தெய்வத்தின் படங்களை மாட்டி மனதார பிரார்த்தனை செய்தாலும் சிறப்பான பலன்களை பெற முடியும்.

From around the web