இன்று அமாவாசை தர்ப்பணம் கொடுத்ததும் இதை மறக்காம செய்துடுங்க!

 
அமாவாசை
பெளர்ணமியைப் போலவே அமாவாசை திதி தினமும் கடவுளை வழிபட உகந்த நாள். பொதுவாக அமாவாசை திதியில், முன்னோரை வழிபட்டு, தர்ப்பணம் கொடுத்த பின்பு அவசியம் செய்ய வேண்டிய வழிபாடு அம்பிகை வழிபாடு. அமாவாசை தர்ப்பணம் கொடுத்த பின்னர், அருகில் உள்ள சிவாலயத்திற்கு செல்லுங்கள். சிவனை தரிசித்த பிறகு, உங்கள் மூதாதையர், முன்னோர்களிடம் தர்ப்பணம் தரும் போது என்ன வேண்டிக் கொண்டீர்களோ அதையே அம்மாள் முன், தாய் முன்பாக பிள்ளை வரம் கேட்பதைப் போல, உங்கள் வாழ்வு உயர கைக்கூப்பி அவள் பாதம் நோக்கி வணங்குங்கள். அடுத்த அமாவாசை திதிக்குள் உங்கள் பிரச்சனைகள் குறைய துவங்கும்.

அபிராமி
அமாவாசை நாட்களில் சந்திரனின் ஒளி  பூமியில் படுவதில்லை. இந்த நாளில் மனம் அலைபாய்வதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை குறித்த புரிதல் இருக்கும். 

அமாவாசையில் கடன் கொடுக்க கூடாது
வீட்டு வாசல், பூஜை அறையில் கோலம் போடக்கூடாது.
தண்ணீர் தெளித்து விட்டால் போதுமானது.
முன்னோர்களை வழிபட்டு படையல் இட வேண்டும். காகத்திற்கு கட்டாயம் சோறு வைக்க வேண்டும். 
அசைவ உணவுகளை சமைக்க கூடாது. 
முன்னோர்கள் வீட்டுக்கு வரும் தினம் . அவர்களை வரவேற்கும் வகையில் வீடு வாசல் சுத்தம் செய்ய வேண்டும். 
தலைமுடி, நகம் வெட்டக் கூடாது. 

அமாவாசை
சாப்பிடுவதற்கு முன்னர் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம்.காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும்.

சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்திருப்பதாக ஐதீகம்.அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும்   நம்பிக்கை

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web