குட்நியூஸ்! திருப்பதியில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு!

 
குட்நியூஸ்! திருப்பதியில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு!


இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்புக்களை பொறுத்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் மார்ச் மாதம் முதல் கொரோனா 2வது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் படிப்படியாக குறைக்கப்பட்டு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

குட்நியூஸ்! திருப்பதியில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு!


பஸ், வாகன போக்குவரத்து இல்லாததால் மே மாதத்தில் தரிசனம் செய்த பக்தர்களின் தினசரி எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கு கீழ் இருந்து வந்தது. இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூன் 21 நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குட்நியூஸ்! திருப்பதியில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு!

மேலும் பஸ், கார் லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஊரடங்கில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

குட்நியூஸ்! திருப்பதியில் உண்டியல் வருமானம் அதிகரிப்பு!


ஊரடங்கு தளர்வு, கொரோனா பரவல் கட்டுப்பாட்டால் ஊரடங்கு நேரத்தில் வரமுடியாத பக்தர்கள் தற்போது திருப்பதிக்கு வர தொடங்கியுள்ளனர். இதனால் திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 13,453பேர். ரூ.1.89 கோடி உண்டியல் காணிக்கை . மேலும் நேற்று 18,211 பக்தர்கள் தரிசனம் செய்ததில் உண்டியலில் ரூ.1.09 கோடி காணிக்கை வசூலானது குறிப்பிடத்தக்கது.

From around the web