திருப்பதியில் ஜூலை மாத திருவிழாக்கள் பட்டியல் வெளியீடு!

 
திருப்பதியில் ஜூலை மாத திருவிழாக்கள் பட்டியல் வெளியீடு!

இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருப்பதியிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில் முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு வகையான திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் குறித்த தகவல்கள்

  • ஜூலை5-சர்வ ஏகாத
  • ஜூலை 6-வசந்த மண்டபத்தில் ராவண வதம் பாராயணம்
  • ஜூலை14-மகரிஷி திருநட்சத்திர பூஜை
  • ஜூலை16-ஸ்ரீவாரி ஆடிமாதம் முதல் தேதி விசேஷ பூஜை உற்சவம்
  • ஜூலை 20-சயன ஏகாதசி பூஜை மற்றும் சாத்தூர் மாத விரத பூஜை
  • ஜூலை21-நாராயண கிரியில் சத்திர ஸ்தாபிதம் ஜூலை 24- வியாச ஜெயந்தி, கருட வாகன உற்சவம்

தற்போது கொரோனா காரணமாக மிகக்குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் தீவிர பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மலையேற அனுமதிக்கப் படுவார்கள் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

From around the web