இன்று சகல தோஷங்களைப் போக்கும் சிவராத்திரி விரதம்! இப்படி விரதமிருந்து பாருங்க! 

 
இன்று சகல தோஷங்களைப் போக்கும் சிவராத்திரி விரதம்! இப்படி விரதமிருந்து பாருங்க! 

பொதுவாக ஒவ்வொரு தமிழ் மாதமும்வருகிற தேய்பிறை சதுர்த்தசி நாள் சிவராத்திரியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சிவராத்திரி மாதா மாதம் வரும் மாத சிவராத்திரி. மாசிமாதம் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரி .
பொதுவாக சிவபெருமானை தினமும் வழிபட்டாலே சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . அப்படியிருக்க, சிவராத்திரி விரதமிருந்து வழிபட்டால், வரும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.

இன்று சகல தோஷங்களைப் போக்கும் சிவராத்திரி விரதம்! இப்படி விரதமிருந்து பாருங்க! 

அதிலும் குறிப்பாக தேய்பிறை சதுர்த்தசி திதியும் சிரவண நட்சத்திரமும் சேரும் நாளில் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரிகளில் சிவவழிபாடு செய்திட கோடானு கோடி இன்பங்களை வாழும் போதே பெற முடியும். ‘எங்கேயும், எப்போதும் என்ற பொருளில் தான் சிவபெருமானை சதாசிவன் என்கிறோம்.

சிவம் என்றால் மங்கலம், சுபம் எனப் பொருள் படும். இத்தகைய சிறப்பு பெற்ற சிவனுக்கு உகந்த ராத்திரியே சிவராத்திரியில் சிவதரிசனம் செய்வோம். உலகம் முழுவதும் நிலவி வரும் துன்பம் போக பிரார்த்திப்போம்.சிவாய நம சொல்லுவோம். வளமான வாழ்வு பெறுவோம். .

From around the web