இன்று 7 தலைமுறை பாவம் போக்கும் மகாளய அமாவாசை... இதை செய்ய மறக்காதீங்க!
இன்று ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் மகாளய அமாவாசை. இந்த நாளில் முன்னோர்களுக்கு செய்யும் பித்ரு காரியங்களைச் செய்ய மறக்காதீங்க. இந்த மகாளய அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற வழிபாடு, பூஜை, தர்ப்பணம், அன்னதானம் அனைத்துமே பல மடங்கு சிறப்புக்களையும், வளங்களையும் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கொண்டு வந்து சேர்க்கும். அனைத்து அமாவாசைகளுமே முன்னோர்களை வழிபட ஏற்றவை என்ற போதிலும் இந்த மகாளய பட்ச காலத்தில் தான் அவர்கள் தமக்கு விருப்பமானவர்களைச் சந்திக்க பூமிக்கு வருவதாக ஐதிகம். அதனால் இந்த மகாளய அமாவாசை தினத்தில் மனமுருகி அவர்களைப் பிரார்த்தனை செய்து வழிபடுங்க.
இந்த நாளில் நம் முன்னோர்கள், சந்ததியினர் அனைவரையும், அவர்கள் செய்த நல்ல காரியங்களையும், அவர்கள் பட்ட சிரமங்களையும் மனத்தில் கொண்டு இந்த தர்ப்பண சடங்குகளை கடைப்பிடிப்பது மேலும் புண்ணியங்களை கொண்டு வந்து சேர்க்கும். நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் காலமான இந்த மகாளயபட்சத்தில் பஞ்சபூத அம்சங்களாக பூமிக்கு வருவதாக கருட புராணம் எடுத்துரைக்கிறது. சாதாரண அமாவாசைகளில் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே.
ஆனால் மகாளய அமாவாசையில் நாம் செய்யும் வழிபாடு நம் தலைமுறை தாண்டி நமக்கு உதவிய அனைத்து புண்ணிய ஆத்மாக்களையும் மகிழ்ச்சி அடைய செய்கிறது. இந்த நாளில் விரதம், வழிபாடு செய்யும் போது அத்தனை பித்ருக்களின் ஆசியையும் ஒருசேர பெறலாம். இந்நாளில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இயலாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுப்பது கூடுதல் சிறப்பு. இந்த தானம் ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரும் என்கின்றன நம் புராணங்கள்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!