சபரிமலையில் 10,000 பக்தர்களுக்கு அனுமதி!

 

மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத் தொடக்கத்திலும் சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. சென்ற ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. நேற்று (சனிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

இது குறித்து கேரளா அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தரிசனம் பெற 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு சப்ரீமால மாதாந்திர பூஜைக்கு தினமும் 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றும் அவசியம் என அரசு தெரிவித்துள்ளது.