இன்று லட்சுமி கடாட்சம் பெருகும் வளர்பிறை அஷ்டமி!

 

ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்த எட்டாவது நாள் அஷ்டமி திதியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பைரவரை வழிபடுவதால் கூடுதல் சிறப்பான பலன்களை பெறலாம்.

எல்லா அஷ்டமி திதியிலும் பைரவரை வழிபடலாம் என்றாலும் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. சிவனின் காவல் அம்சமாக பைரவர் கொண்டாடப்படுகிறார்.

நம் துயரங்கள், இன்னல்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் இந்த அஷ்டமி. பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம்.

அந்த வகையில் இன்று காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து அவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபடலாம். இந்த தினத்தில் பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும், வணங்குவது சிறப்பான பலன்களை பெற உதவும்.

மேலும் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புகள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன்றவைகளையும் முழுவதுமாக ஒழிக்கும். நெடுநாட்களாக வந்து சேராமல் இருந்த பணவரவுகளும் விரைவில் வந்து சேரும். வீட்டில் இதுவரை இருந்து வந்த பொருளாதார கஷ்ட நிலை மாறி லட்சுமி கடாட்சம் நிலைக்க தொடங்கும்.