இன்று ஆனந்தத்தை அள்ளித் தரும் சதுர்த்தி !

 


ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சதுர்த்தி விரதம். இந்த நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது ஐதிகம்.

​முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் உள்ளன. இருப்பினும் அந்த விரதஙக்ளில் மிகச் சிறந்ததும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவுக்கடந்த ஆனந்தத்தையும், சகல சௌபாக்கியங்களையும் பெறமுடியும் என்பது ஆன்மிக அன்பர்கள் கருத்து.


இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபட நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.


மேலும் மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடிவதுடன் சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும் என்பது அனுபவஸ்தர்களின் வாக்கு. சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்வோம். சங்கடங்கள் யாவையும் நீங்கப்பெற்று வளமான வாழ்வு பெறுவோம்.