undefined

தீபாவளி கொண்டாட்டம்... சென்னையிலும் கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கம்!

 
தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கி இருக்கும் நிலையில் சென்னையிலும் இன்று பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.  

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பேருந்து நிலையங்களுக்குப் பயணிக்கும் வகையில் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
2. கோயம்பேடு பேருந்து நிலையம்
3. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் 

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 300 சிறப்பு இணைப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. 

அதே போன்று தீபாவளியைக் கொண்டாடிவிட்டு ஊர் திரும்பும் பொது மக்களின் நலனுக்காக வரும் நவம்பர் 2ம் தேதியும், நவம்பர் 3ம் தேதியும் மாலை மற்றும் இரவுப்பணி (PM & Night Shift) 100 பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் தீர்மானித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!