அவரவர் திசாபுத்திக்கேற்ப வழிபட வேண்டிய தெய்வங்கள் !

 


கடவுளை தொழ அனைத்து நாட்களும், நேரங்களுமே நல்ல நாட்கள் தான். ஆனால் நம் சுய ஜாதகத்தில் நடக்கும் திசை, புத்திகளுக்கேற்ப அதற்குரிய தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபட்டு வர வாழ்வில் விரைவில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கலாம்.


குறிப்பாக செவ்வாய் திசையில் சனி புத்தி நடக்கும் ஜாதகக்காரர்களுக்கும், வியாழன் திசையில் சுக்ர புத்தி நடக்கும் ஜாதகக் காரர்களுக்கும் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கலாம். இவர்கள் கூட்டுத் தொழிலை முயற்சிக்கலாம். இவர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டால் மேலும் தாமதமாகலாம். சிறு அளவில் அவ்வப்போது ஆரோக்கியக் குறைபாடும் உருவாக வாய்ப்பு உண்டு.

இவர்கள் பைரவர் வழிபாடு, வராஹி வழிபாடு, துர்க்கை வழிபாடு, பிரதோஷ காலத்தில் நந்தி தேவர் வழிபாடுகளை தொடர்ந்து மேற்கொள்ள மேலும் நன்மைகளை அதிகரிக்கலாம்.
அந்த வகையில் சூரிய திசை நட்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பான நன்மைகளை அள்ளி வழங்கும்.
சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகப் பெருமான் வழிபாட்டால் முன்னேற்றம் காணலாம்.


புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.
வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி வழிபாடு திருப்தி தரும்.
சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.
ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட்டு வருவது கூடுதல் நன்மைகளை அள்ளி வழங்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள்.