நடிகை நயன்தாரா தந்தை உடல்நிலை கவலைக்கிடம்!

 

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகின்றனர். நயன்தாராவை திருமணகோலத்தில் பார்க்க வேண்டும் என்பது தான் அவருடைய தந்தை குரியனின் கனவு.

இந்நிலையில், குரியனின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நயன்தாரா அருகில் இருந்து தந்தையை கவனித்து வருகிறார்.
தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் தகவல் துபாயில் உள்ள மகனுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக கொச்சி திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.