பைக்கிலேயே உலகம் சுற்றும் `தல’ அஜித்! வைரலாகும் புகைப்படங்கள்!

 

தமிழ் திரையுலகில் தனது நடிப்பாலும், தனிப்பட்ட திறமைகளாலும் தமிழ் ரசிகர்களிடையேதல’ ஆக வலம் வருபவர் நடிகர் அஜித்.இவர் தற்போது ’வலிமை’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.


இந்த படத்திற்காக வலிமை படக்குழுவினர் அனைவரும் ரஷ்யா சென்ற நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அனைவரும் திரும்பிவிட்டனர். ஆனால் அஜீத் இன்னும் இந்தியா திரும்பவில்லை.
அஜித் ஒரு சினிமா நடிகர் மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் செய்தல், போட்டோகிராபி மற்றும் மோட்டார் பைக், கார் பிரியர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.


இந்நிலையில் ரஷ்யாவில் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பை முடித்த அஜீத், அந்நாட்டில் சுமார் 5000 கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக ஏற்கனவே ரஷ்யாவில் பைக்ரைடு செய்த சிலரை சந்தித்து அவர் ஆலோசனை பெற்று வருகிறார்.

இதனால் கூடுதலாக இன்னும் ஒரு சில நாட்கள் அங்கு தங்கியிருந்து அவர் பைக் ரைடில் ஈடுபட போகிறார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. ரஷ்யாவில் பைக்ரைடு செய்தபின் அஜித் சென்னை திரும்புவார் என்றும் அதன் பின்னர் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.