நடன இயக்குநர் சிவசங்கர் மாரடைப்பால் மரணம்!!

 

தமிழ் திரையுலகில் பிரபல நடன இயக்குநர் நடன மாஸ்டர் சிவசங்கர் . இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. வீட்டில் உடல்நிலை கவலைக்கிடமானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பண உதவி கேட்டு அவரது மகன் கோரிக்கை விடுத்திருந்தார். வைத்துள்ளார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றவர் சிவசங்கர்.


தனுசின் சூப்பர் டூப்பர் ஹிட்டான திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மூலம் இவரது புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இது தவிர வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, பரதேசி, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களில் நடிப்பிலும் பெயர் வாங்கினார்.

சிவசங்கர் மாஸ்டருக்கான சிகிச்சை செலவுகளை சமாளிக்க முடியாமல் அவரது குடும்பம் திணறி வருவதாக அவரது மகன் ட்வீட் பண்ணியிருந்தார்.

அதில் என் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி செய்யுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

நடிகர் சோனுசூட் சிவசங்கரின் மருத்துவ செலவை ஏற்பதாக தமது ட்விட்டரில் தெரிவித்தார். அதன்படியே சிகிச்சை செலவை ஏற்க உதவிக்கரம் நீட்டினார். இந்நிலையில் மிக மோசமான நிலையில் இருந்த சிவசங்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது.

தற்போது நடன இயக்குநர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகாதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பிரபலங்கள், திரைத்துறையினர், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.