சொந்த செலவில் கிராமத்திற்கே இலவச தடுப்பூசி வழங்கிய பிரபல நடிகர்..!

 

தெலுங்கு திரையுலகில் முண்ணனி கதாநாயகன்களில் ஒருவர் நடிகர் மகேஷ் பாபு. இவருடைய மகளுக்கு 9 வயது . இந்த பிறந்தநாளை மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாட எண்ணினார் மகேஷ் பாபு.

இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்தின் சித்தாபூர் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தனது சொந்த செலவில் இலவச தடுப்பூசி வழங்கினார்.
இதற்கு முன்பே மகேஷ்பாபுவின் தந்தையான பிரபல நடிகர் கிருஷ்ணாவின் 78வது பிறந்தநாளில் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நாளில் அவரை பின்பற்றி அவரது ரசிகர்களும் ஆதரவற்றவர்களுக்கு உணவும், ஆதரவற்ற இல்லங்களுக்கு மளிகைப்பொருட்களும் வழங்கி அவரது மகளின் பிறந்தநாளை கொண்டாடினர் .