அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன பிரபல நடிகை!

 

தமிழ் சினிமா உலகில் தனக்கென தனிப்பாணியில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்புபெற்றவர் நடிகை விசித்ரா. இவர் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் கலக்கியவர் .

சினிமாவிற்கு வந்த புதிதில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விசித்ரா அதனையடுத்து படங்களில் கதாநாயகியாகவும் சின்னத்திரையில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து வந்தார். வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு புனேவில் குடியேறினார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிறார் நடிகை விசித்ரா. இதன் அடிப்படையில் லேட்டஸ்ட் விசித்ராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் நடிகை விசித்ரா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போனதாக ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.