BREAKING!!கமல்ஹாசனுக்கு கொரோனா!!

 

தமிழ் திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் தற்போது அமெரிக்கா சென்று திரும்பியிருந்தார்.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்”. எனப் பதிவிட்டுள்ளார்..