புது தெம்புடன் படம் இயக்குகிறார் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்!

 

வணக்கம் சென்னை, காளி என இரண்டு படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி, தற்போது தனது கணவரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள புது தெம்புடன் புதியதாக மீண்டும் படம் இயக்க களத்தில் இறங்கியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கவுள்ள இந்த படத்தில், தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படம் வாழ்வின் பயணத்தை பற்றிய கதையாக இருக்கும் என்கிறார் கிருத்திகா உதயநிதி.

இதற்கு முன்பு இயக்கிய இரண்டு படங்களுமே, நல்ல இயக்குநராக அவருக்கு பேர் வாங்கிக் கொடுத்திருந்த போதிலும், பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இம்முறை ஹிட் படத்தைக் கொடுக்கும் முனைப்போடு பணியாற்றி வருகிறார்.