கோடிக்கணக்கில் கடன்! அடுத்தடுத்து 5 புதிய படங்கள்! வேகமெடுக்கும் சிவகார்த்திகேயன்!

 

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். இன்று தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது நடிப்புடன் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெற்றி பெற்ற கனா படத்தை தயாரித்து இருந்தார். மேலும் சில படங்களை தயாரிப்பில் உள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்த படத்தை கொரோனா ஓ.டி.டி.யில் வெளியிடுவது குறித்து படக்குழு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சிவகார்த்திகேயன் மற்ற சில தயாரிப்பாளர்களின் கடன்களை ஏற்றுக்கொண்டதால் அவர் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கடனில் இருந்து மீள சிவகார்த்திகேயன் 5 புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 படங்களையும் ஒரே நிறுவனத் தயாரிப்பில் உருவாவது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்துக்கு ரூ.15 கோடி வீதம் 5 படங்களுக்கும் சேர்த்து ரூ.75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுத் தகவல்களும் விரைவில் வெளியாகலாம் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.