அடி தூள்! பிரேம்ஜி அமரனுக்கு விரைவில் திருமணம்

 

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் என பன்முக அவதாரம் எடுத்திருப்பவர் பிரேம்ஜி. இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பல அவதாரங்களில் தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் கங்கை அமரன். தந்தையின் திறமைகள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் பிரேம்ஜி. இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. சமீபத்தில் ப்ரேம்ஜியின் தாயார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பிரேம்ஜியின் திருமணம் குறித்து கங்கை அமரன் தெரிவிக்கையில் பிரேம்ஜிக்கு இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருக்கிறோம். அவருடைய அம்மா சமீபத்தில் உயிரிழந்த சோகத்திலிருந்து விடுபட்டதும் அவருக்கு திருமணம் செய்து வைக்க இருக்கிறோம்.
இதுவரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்த பிரேம்ஜி தற்போது ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதனால் அவருக்கேற்ற சரியான பெண்ணை தேடி வருவதாகவும், பெண் அமைந்ததும் விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.