BREAKING: புலவர், பாடலாசிரியர் புலமைப்பித்தன் காலமானார்!!

 

புலவர் புலமைப்பித்தன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85.

கவிஞர் புலமைப்பித்தன் 1935ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கோவையில் பிறந்தவர். திரைப்பட பாடல் எழுதுவதற்காக 1964ம் ஆண்டு சென்னை வந்த புலமை பித்தன், சென்னை சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரான இவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். அதன் பின்னர், எம். ஜி. ஆரால் அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2001ல் தமிழக அரசின் பெரியார் விருதை பெற்றார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2010 ஆண்டு வரை இவர் திரைப்படங்களில் பாடல்களை எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புலமை பித்தன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலமானார்.