undefined

‘ராகினி MMS’  நடிகர் தபாஸ் கவலைக்கிடம்... ஐசியுவில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
ராகினி எம்.எம்.எஸ் படத்தின் மூலமாக ரசிகர்களிடையே பரவலாக பிரபலமடைந்த நடிகர் பர்வின் தபாஸ் நேற்று முன் தினம் இரவு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விபத்தில் படுகாயமடைந்துள்ள நிலையில், ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நிலைமைத் தொடர்ந்து சீரற்ற நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது மனைவியும், நடிகையுமான ப்ரீத்தி ஜாங்கியானி உடனிருந்து கவனித்து வருகிறார்.

நேற்று முன் தினம் நடைபெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், நடிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நகைச்சுவைத் திரைப்படமான கோஸ்லா கா கோஸ்லாவில் நடித்ததற்காக நடிகர் தபாஸ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். அதன் பின்னர் ‘ராகினி எம்எம்எஸ் 2’  மற்றும் ‘மை நேம் இஸ் கான்’ ஆகிய படங்களிலும், மேலும் சமீபத்தில் மேட் இன் ஹெவன் என்ற பிரைம் வீடியோ தொடரிலும் நடித்திருந்தார். அவர் நடிகை ப்ரீத்தி ஜாங்கியானியை மணந்திருந்த நிலையில், இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!