அதிர்ச்சி! பிரபல தயாரிப்பாளர் உயிரிழப்பு!

 

தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு.இவர் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மகேஷ் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆரம்ப காலத்தில் செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.சிறிது காலத்திற்கு பிறகு தயாரிப்பாளர் ஆனார்.இவருடைய ஈஸ்ட்கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் கல்யாண்ராம் நடித்த ‘118’, கீர்த்தி சுரேஷ் நடித்த, ‘மிஸ் இண்டியா’, சத்யதேவ் நடித்த ‘திம்மரசு’ உட்பட பல படங்களைத் தயாரித்துள்ளார்.

தமிழில் வெளிவந்த ‘பாகுபலி’படத்தின் விளம்பர வடிவமைப்பாளர். விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டவர்.
விசாகப்பட்டினத்தில் இருந்த தயாரிப்பாளர் மகேஷுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.