விஜய், தனுஷ் படங்களுடன் போட்டியிடும் `டாக்டர்’!

 


தமிழ் திரையுலகின் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் கதாநாயகன்களில் நடிகர் சிவகார்த்திகேயன் முண்ணனியில் உள்ளார். அவரின் நடிப்பில் தற்போது டாக்டர் படம் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், இயக்கத்தில் உருவான படம் ‘டாக்டர்’.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.வில்லன் கதாபாத்திரத்தில் வினய்யும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா போன்ற நட்சத்திரப் பட்டாளங்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அனிருத் இசையில் உருவான இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில், டாக்டர் படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. தற்போது திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களில் முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர் படமும் , இரண்டாவது இடத்தில் தனுசின் கர்ணன் படமும் மூன்றாவது இடத்தில் டாக்டர் படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய், தனுஷ் படங்களின் அளவுக்கு சிவகார்த்திகேயன் படமும் மக்களிடையே வரவேற்பு பெற்றிருப்பது ரசிகர்களை மட்டுமல்ல சிவகார்த்திகேயனையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.