கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

 

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர்களில் பிறைசூடன் குறிப்பிடத்தகுந்தவர். இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.


இவர் இதுவரை 400 திரைப்படங்களில் 1,400க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அத்துடன் சுமார் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றவர். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் , கபிலர் விருதையும் பெற்றுள்ளார். இவர் சில காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் பிறைசூடன் நெசப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் காலமானார். இந்த தகவலை அவரது மகன் உறுதி செய்துள்ளார்

இவருடைய நடந்தால் இரண்டடி, ஆட்டமா தேரோட்டமா பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இது தவிர பக்தி பாடல்கள் 5000க்கும் மேல் பாடல்கள் எழுதியுள்ளார். சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியும் ஆவார்.
இவருக்கு வயது 65. இவர் இன்று அக்.8,2021 மாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர். இவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.