undefined

2020ல் கெட்ட ஆட்டம் போட்ட டாப் 10 ஹீரோயின்ஸ்!

 

கொரோனா 1,2,3 எல்லாம் கடந்து ஒமிக்ரான் வெர்ஷனில் வந்து நிற்கிறது மக்களின் வாழ்க்கை. இத்தனை களேபரத்திலும் கடந்த 2020ல் கெட்ட ஆட்டம் போட்டு ஹார்ட் பீட் எகிற செய்த ஹீரோயின்ஸ் யார் என்று களத்தில் இறங்கினோம். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மல்லுவுட்,டோலிவுட், சாண்டல்வுட் ரசிகர்கள் என இந்தியா முழுக்கவெ இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்து, பித்து பிடிக்க வைத்த டாப் ஹீரோயின்களின் லிஸ்ட் இது. சமூக வலைத்தளங்களில் இவர்கள் போட்ட கெட்ட ஆட்டத்தின் புகைப்படங்கள் எக்குத்தப்பாக ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை எகிற வைத்தது. போன புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த வருடத்தில் திரையுலகின் டாப் 10 நடிகைகள் பட்டியலில் தங்களக்கு பிடித்தமான நடிகைகள் எந்த இடத்தை பிடித்துள்ளனர் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

கதாநாயகிகளை பொறுத்தவரை படம் ரிலீஸ், கலெக்‌ஷன் மாஸ் என்றெல்லாம் அளவுகோல் கிடையாது. சினிமாவை தாண்டி சோஷியல் மீடியாக்களில் தான் அவர்களது கெப்பாசிட்டியை தெரிந்து கொள்ள முடியும். 2021 ஆம் ஆண்டில் சோஷியல் மீடியாக்களில் டாப் ஃபிகர்ஸாக வலம் வந்த ஹீரோயின்கள் பட்டியல் இதோ!

நயன்தாரா

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். இந்த ஆண்டின் நம்பர் 1 கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் நடிப்பில் நெற்றிக்கண் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷாருக்கான் படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை என்றாலும், விக்னேஷ் சிவன் இந்த ஆண்டில் வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படங்கள் வைரலாகின.

சமந்தா

நடிப்பில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வரும் சமந்தா, கடினமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பேமிலி மேன் திரைப்படத்தில் இவர் நடித்த ராஜி கதாபாத்திரம் அதிக விமர்சனத்துக்குள்ளானது. எனினும் அவரது டெடிகேஷன் பாராட்டுகளையும் பெற்றது. தவிர தற்போது க்ளாமரிலும் இறங்கி அடித்து வருகிறார். புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய ‘ஊ சொல்றியா மாமா’ செம ஹிட். இண்ஸ்டாவில் இவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படமும் தீயாய் பரவி வருகிறது.

பூஜா ஹெக்டே

முகமூடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போதே படத்தின் ஹீரோ ஜீவா பூஜா ஹெக்டேவை டாப் ஹீரோயினாக வருவார் என புகழ்ந்தார். தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துள்ள பூஜா ஹெக்டே, கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம், மாடல் உடைகளில் ரசிகர்களை கவர்ந்தார்.

இன்று தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக வலம் வரும் பூஜா, தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன்

பேட்ட, மாஸ்டர் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். நடிகை என்பதை தாண்டி இவர் ஒரு ரேம்ப் மாடல். இவரது இந்த வருடத்தில் இவர் செய்த ரேம்ப் வாக் பயங்கர வைரலானது. அதுமுதல் இவருக்கு இண்ஸ்டாவில் பலரும் ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். மாளவிகா தெறிக்கவிடும் க்ளாமரான போட்டோஷூட்களால் தனது ரசிகர்கள் பலத்தை அதிகரித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது க்ளாமர் என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ள அவர், புஷ்பா படத்தில் ஆடியும் பாடியும் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

மகாநதி படத்திற்கு பின் சூப்பரான கேரியர் க்ராஃபை மெயிண்டெயின் செய்து வரும் கீர்த்தி, தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டு மற்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழை ஒப்பிடும் போது தெலுங்கு சினிமாவில் தாராளம் காட்டி க்ளாமராக நடிக்கிறாராம். மிஸ் இந்தியா படத்திற்கு பிறகு பான் இந்தியா அளவில் பிரபலமாகியுள்ளார்.

ராஷி கன்னா

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ராஷி கன்னா நடித்து வருகிறார். க்யூட்டாக சிரிக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தலைவி க்ளாமர் மசாலாவையும் தேவையான அளவுக்கு தூவி வருவதால் டாப் லிஸ்டில் வந்துவிட்டார்.

அமலா பால்

சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி ஆண்மீக பயணம், திருமணம், முத்த புகைப்படங்கள் என இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வைரல் குயினாக வலம் வந்தா அமலா பால். தவிர, மீ டூ, பெண்கள் நல கருத்துகளை வெளியிட்டு கவனம் ஈர்த்தார். கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இண்ஸ்டாகிரமையே அதிர வைத்தார். பெரிதாக படங்கள் நடிக்காததால் பட்டியலின் 9வது இடத்தில் உள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என படுபிசியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிடுவதில் நம்பர் 1 ஆக இருக்கிறார். தமிழில் தற்போது பெரிதாக படங்கள் நடிப்பதில்லை என்பதால் ரசிகர்களிடம் ஃபேடாக வருகிறார். இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்துள்ளார். படம் இதுவரை ரிலீஸாகவில்லை. அந்த படத்திற்கு பிறகு இவரது தமிழ் மார்க்கெட் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்ஷா குப்தா

இதுவரை பார்த்தவர்கள் அனைவருமே வெள்ளித்திரை பிரபலங்கள். சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தாவோ வெள்ளித்திரை நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி புயலாக இண்ஸ்டாவில் வலம் வந்தார். பிகின் தொடங்கி புடவை வரை இவர் போட்டோ பதிவிட்டாலே அதில் க்ளாமர் தான். இதுவே இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பையும் பெற்று தந்தது. ருத்ர தாண்டவம் படத்திற்கு பிறகு சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா நடித்து வருகிறார். விரைவில் லிஸ்டில் டாப் இடத்தை பிடித்து விடுவார்.