வடிவேலுவின் அசத்தல் அலப்பறைகள்! வைரலாகும் புகைப்படங்கள் !

 

தமிழ் திரையுலகில் தமது தனிப்பட்ட காமெடித் திறமையால் வைகைப் புயலாக எண்ணற்ற ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகர் வடிவேலு . இவருக்கு நேற்றைய தினம் பிறந்தநாள் விழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இவர் தமிழ் சினிமாவில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு முழு வீச்சில் அவர் திரைப்படங்களில் நடிக்க வருகிறார்.

உற்சாகம் கரைபுரண்டு ஓடும் இந்த நேரத்தில் இருந்த அவரது ரசிகர்கள், பிறந்தநாளில் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியைப் பதிவு செய்தனர்.
நாய் சேகர், வெடிகுண்டு முருகேசன், தீப்பொறி ஆறுமுகம், வண்டு முருகன், கைபுள்ள உள்ளிட்ட பெயர்களுடன் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக தனது பிறந்தநாளில் வெளியே வராத வடிவேலு குடும்பத்தினருடன் கொண்டாடினார்.ஆனால் இந்த ஆண்டு,61 வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வடிவேலுவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.’எனக்கு எண்டே கிடையாது’ என சில நாட்களுக்கு முன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தனது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு உற்சாகமாக தயாராகி வருகிறார் வடிவேலு.புதிய படமான நாய் சேகர் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ வுடன் இணைந்து தமது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.