உஷார்!அரசு அதிகாரிகள் மொபைலை ஆப் செய்தால் கடும் நடவடிக்கை!

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் அபாயப் பகுதிகளாக மாறி வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் பிற விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.


இந்நிலையில், டேராடூன் மாவட்ட மாஜிஸ்திரேட் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உத்தரகாண்ட்டில் உள்ள அனைத்து மாவட்ட அளவிலான அதிகாரிகளும் தங்களுடைய மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்ய கூடாது . இதனை மீறும் அதிகாரிகள் மீது பேரிடர் மேலாண் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.