சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை!மாநகராட்சி ஆணையர் உத்தரவு !

 

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பாதிப்பு அசுர வேகம் எடுத்து வருகிறது. முதல் அலையை விட 2வது அலை மிகத் தீவிரமடைதுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் பெருகி வரும் கொரோனா தொற்றை தடுக்கவும், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.

அந்த வகையில் இன்று முதல் ஏப்ரல் 30 வரை மாலை 3 மணி வரை பொது மக்கள் கூடுவது, மனித சங்கிலி, பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த தடைகளை பிறப்பித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.