சீரழியும் 2K கிட்ஸ்!! ஆடம்பர வாழ்க்கைக்காக மனைவியை விலைபேசி விற்ற கணவன்!

 

ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, ஸ்மார்ட்போன் வாங்கும் மோகத்தில் தன்னுடைய மனைவியை கணவனே விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பதற்காக தனது இளம் மனைவியை முதியவர் ஒருவருக்கு விலைபேசி விற்றிருக்கிறான் 17வயது கணவன்.
இந்த கொடுமை ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் பலங்கிர் மாவட்டத்தில் வசித்து வந்த 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியில் வசித்து வந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் இருவருமே சேர்ந்து கூலித் தொழிலாளிகளாக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்று வேலைப் பார்த்து வந்தனர்.

இந்நிலையில், வேலை பார்த்த இடத்தில், 55 வயது முதியவர் அந்த சிறுவனௌக்கு அறிமுகமாகியிருக்கிறார். நாளடைவில் அந்த முதியவரிடம் இருந்த பண வசதி சிறுவனின் சபல மனசை அசைத்துப் பார்த்திருக்கிறது. தனது ஆடம்பர வாழ்க்கை ஆசைக்கு தனது மனைவியை முதியவரிடம் 1.8 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி விற்றிருக்கிறார். முதியவர் கொடுத்த அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, ஊர் சுற்றிப் பார்த்து, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த சிறுவன், பின்னர், தான் ஆசைப்பட்ட மாதிரியே விலையுயர்ந்த ஸ்மார்ட்போனும் வாங்கியிருக்கிறார். பின்னர் மிச்ச பணத்தை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பி, தனது மனைவி வேறு ஒருவரிடம் ஓடிச் சென்று விட்டதாக அனைவரிடமும் கூறியிருக்கிறார்.

சிறுவனின் பேச்சை நம்பாத பெண்ணின் குடும்பத்தார், இது குறித்து, பெல்படா போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், பணத்திற்கு ஆசைப்படு, மனைவியை வேறு ஒருவருக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து ஒடிசா போலீசார் அப்பெண்ணை மீட்பதற்காக ராஜஸ்தான் சென்றனர். அப்போது, உள்ளூர் மக்கள் போலீசாரை சுற்றி வளைத்து கொண்டனர். அந்தப் பெண்ணுக்காக 1.8 லட்சம் கொடுத்திருக்கிறார் முதியவர். பெண்ணை அழைத்துப் போவது என்றால் அந்தப் பணத்தை கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள் என்று போராட்டம் செய்து பெண்ணை அனுப்ப மறுத்தனர். பின்னர் ஊர் மக்களிடம் சமாதானம் பேசி அந்தப் பெண்ணை மீட்ட போலீசார், சிறுவனைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்