undefined

ஏக்கத்தில் சீன மக்கள்!!உணவிற்காக கையேந்தும் அவலம்!!

 

சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் சீன அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீட்டினுள் முடங்கி கிடப்பதோடு, உணவு பொருட்களும் சரிவர கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நகரத்தைச் சேர்ந்த பொது மக்களும் பலரும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.