மக்களே உஷார்!.. நாளை முழு ஊரடங்கு

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை அசுர வேகம் எடுத்து அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உணவகங்கள், கோவில்கள், தியேட்டர்கள் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு மையம் மறுபடியும் திறக்கப்பட்டு செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் பொருட்டு இன்று காலையில் முதல்வர் இல்லத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழகத்தின் உயர்மட்டக் குழுக்கள் அனைவரும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு முதல்வர் எடப்பாடி அதிரடி அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகம் முழுவதும் தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கின்போது தமிழகம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் ஒரு போலீஸ் அதிகாரி, வருவாய் துறை அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.