அசத்தல் மாணவி!!டாக்டர் பட்டம் பெற்ற கோவை சிறுமி!!

 

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கௌரி உதயேந்திரன். இவருக்கு விப்ரஜா என்ற மனைவியும், பிரகதி என்ற 8 வயது மகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.


பிரகதி 3 வயது முதலே சிலம்பம் மற்றும் குங்பூ கற்று கொள்கிறார். அவர் தற்போது தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிலம்பம், இரட்டை சுருள்வாள் வீச்சு, கம்பு சண்டை, கம்பு ஜோடி போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகிறார். அதில் தங்கம், வெள்ளி என பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார்.


சின்னஞ்சிறு வயதிலேயே பல சாதனைகள் புரிந்ததால் அவரை கௌரவிக்கும் வகையில் சர்வதேச யுனிசெப் கவுன்சில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று கோவையில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சர்வதேச யுனிசெப் கவுன்சில் தூதர் டாக்டர் வேலன்ட்டினா பேட்ரிஸ் சிறுமி பிரகதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். 8 வயது சிறுமி டாக்டர் பட்டம் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.