கொலை வழக்கில் சிக்கிய திமுக எம்பி! விரைவில் கைது?!

 

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்.இவர் பணிக்கன் குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும், கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேசின் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார. செப்.19ம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதனால் பணி செய்த தொழிற்சாலையில் விசாரித்தனர்.


அவர்கள் கோவிந்தராஜ் உடல்நிலை சரியில்லாஅமல் பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்த போது அவரது உடல் முழுவதும் ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. உடனே காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலை வழக்கு புகார் மனு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த்ராஜின் உடல் ஜிப்மர் மருத்துவனை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகிய 6 பேரும் அவரை அடித்தே கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் தவிர குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 நபர்களையும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விரைவில் திமுக எம்.பி. கைது செய்யப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன .