#BREAKING: இப்போதைக்கு பேருந்துகள் இயக்கப்படாது!ஈரோட்டில் மக்கள் அவதி!

 

தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்து போக்குவரத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 50 சதவீதம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் தனியார் பேருந்துகள் இன்னும் இயக்கப் படவில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விடுத்த செய்திக்குறிப்பில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை கடுமயைாக உயர்ந்துள்ளன. இந்நிலையில், 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.


அதனால் இப்போதைக்கு தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவு செய்யவில்லை எனவும், பேருந்துகளை இயக்கினால் தங்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு சில மாவட்டங்களில் பெயரளவிற்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எல்லா பேருந்துகளும் இயக்க 100 சதவீதம் பயணிகளுக்கான அனுமதி அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.