திருமணமான மறுநாளே ரூ1,30,000 பணம், நகையுடன் மணப்பெண் ஓட்டம்! நூதன கொள்ளையில் ஈடுபட்ட தாய்!

 


திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிக்கவுண்டம்பாளையம் பகுதியில் செட்டி தோட்டத்தில் வசித்து வருபவர் 34 வயதான மாரப்பன். இவர் விவசாயத் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சிறுவலூரில் புரோக்கர் ராஜேந்திரன் மூலம் முடிவு செய்தனர். அந்த வகையில் திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் அம்பிகா என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.

ராஜேந்திரன் உடனே உறவினர்கள் முன்னிலையில் பூவைத்து நிச்சயம் செய்துள்ளார். புரோக்கர் அம்பிகா மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் பெண்ணிற்கு உறவு என்று யாரும் இல்லை எனக் கூறினர். இதனால் உடனடியாக 2 நாட்களுக்குள் திருமண ஏற்பாடு செய்தனர்.

மணப்பெண்ணிற்கு தேவையான தங்க தாலி, தங்க கம்மல் மற்றும் பட்டு புடவை என ரூ50000க்கு எடுத்து கொடுத்துள்ளார். குலதெய்வக் கோவிலில் திருமணம் நடைபெற்றது.இதற்கு புரோக்கர் கமிஷனாக 1,30,000 ரூபாய் பெற்றுக் கொண்டனர்.

இந்த பெண் திருமணம் முடிந்து அடுத்த நாள் மதியம் 3 மணிக்கு காரில் ஏறி மாயமாக சென்றுவிட்டார். ராஜேந்திரன் மனைவி ரீசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இது குறித்து புரோக்கர் சந்திரனிடம் கூறியுள்ளார் மணப்பெண் கூறிய விலாசத்தில் அரியலூர் சென்று அங்கு ரீசாவிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து ஒன்பது வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இவர் கணவரை பிரிந்து கேரளாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் என்பதும், தங்கம் தேவி ஆகியோர் இதுபோல் திருமணம் செய்தால் நிறைய பணம் கிடைக்கும் எனக் கூறியதால் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதாகவும் தெரிய வந்தது. ராஜேந்திரன் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அம்பிகா , மணப்பெண் ரீசா தங்கம் தேவி ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது இவர்கள் அனைவரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.