நவ.30 வரை நீட்டிப்பு!! தமிழக அரசு அதிரடி!!

 


தமிழகத்தில் கொரோனா 2 து அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பின்னர் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.


அந்த வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவில்கள் திறப்பு, தியேட்டர்களில் 100 % அனுமதி, சுற்றுலா தலங்கள் திறப்பு, உணவகங்கள் திறப்பு, பொது போக்குவரத்திற்கு அனுமதி என அனைத்து தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.


படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்த போதிலும் கொரோனா 3வது அலை அச்சம் காரணமாக தொடர்ந்து கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் இவைகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.