அரசு தேர்வுகளில் இனி தமிழ் கட்டாயம்!

 


தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி 23 நாட்கள் நடத்தப்பட்டன. இதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று மனிதவள மேலாண்மைத் துறையில் புதிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்தில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும்.

அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்.


கொரோனாவால் பெற்றோரை இழந்த முதல் நிலை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் மொழி பயின்றவர்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.


செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர் வருவாய் மாவட்டங்களில் ஊழல்தடுப்பு கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்.

அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு 40 சதவீதமாக உயர்த்தப்படுவதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.