எச்சரிக்கை! உரிமம் பெறாமல் இதை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை!

 

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் அரசு கறாராக நடந்து வருகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பெயர் கிராமத்தில் குவாரிகள் உள்ளன. இதில் உள்ள கனிம வளங்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள் அரசுக்கு துரோகம் செய்து விட்டதாக உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டிருந்தது.


இதன்படி 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசின் சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை அரசு, கடுமையாக கையாள வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் உரிமம் இல்லாமல் கனிம வளங்கள் எடுக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் அரசு சட்டத்திற்கு புறம்பானவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.