”கையவச்சு பாருங்க…” முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்..!

 

ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஒளிப்பரப்பு செய்யப்பட்டதற்கு தைரியம் இருந்தால் என் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கட்டும் என பாஜக அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்றார். முன்னதாக தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு வந்திருந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருந்த போது முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளை நண்பர்களாக நடத்தினார். ஆனால் அவர் முதல்வரானது கதையே மாறிவிட்டது. மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்வது, அவர் சுற்றுலா சென்று திரும்புவது போல காட்டப்படுகிறது.

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தயார் செய்து சமர்ப்பித்த பிறகு, மத்திய அரசிலிருந்து முறைப்படு குழு அமைத்து, அவர்கள் சேதங்களை கணக்கிட்ட பிறகு நிதி வழங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடியின் உரை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், ஸ்ரீரங்கம் கோயிலின் கருத்தியல் மண்டபத்தில் சொற்பொழிவை கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது தொடர்பா-க அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல. தைரியம் இருந்தால் தமிழக அரசு என் மீது வழக்கு தொடரட்டும் என்று கூறினார்.