உடனே முந்துங்க!! இன்னும் 3 நாள் தான் இருக்கு! நவம்பர் 30க்குள் செய்யலன்னா பென்சன் கிடைக்காது!

 


இன்று மூன்று தினங்கள் மட்டுமே இருக்கிறது. இம்மாதம் 30ம் தேதிக்குள் நீங்கள் இதைத் தரலைன்னா அப்புறமா உங்களுடைய பென்ஷன் பணம் உங்களுக்கு கிடைக்காது. உடனே முந்துங்க!

ஓய்வூதியதாரர்கள் வருடந்தோறும் அரசுக்கு, தாங்கள் உயிரோடு இருப்பதை உறுதி செய்ய ஜீவன் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த வருடம் கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக இந்த நவம்பர் 30ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என காலகெடு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனை செய்யாவிட்டால் டிசம்பரில் பென்சன் கிடைக்காது.

சில காலத்திற்கு முன்பு வரை வங்கிகளுக்கும், அஞ்சலகத்திற்கும் அலைய வேண்டியிருந்தது. தற்போது வீடு தேடி சேவையும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.மேலும் இதனை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஜீவன் பிரமான் ஆப்பினை பதிவிறக்கம் செய்தால் போது. அதில் ஆதார் எண், உங்கள் வங்கிக் கணக்கு எண், பெயர், மொபைல் எண், பென்சன் பேமெண்ட் ஆர்டர் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

இதன் பிறகு பதிவு செய்ததை உறுதி செய்ய மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டு சப்மிட் கொடுத்தாலே போதுமானது. இதில் PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் இவைகளை பதிவிட வேண்டும்.

இத்துடன் ஆதார் எண்ணையும் சமர்ப்பித்து கை ரேகையை ஸ்கேன் செய்தால், ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். இந்த வகையில் ஓய்வூதியதாரர்கள் லைஃப் சர்டிபிகேட்டினை வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிக்கலாம்.

அஞ்சலகத்தில் தபால்காரர்களிடமும் வீடு தேடி வந்து டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் சேவையை பெறலாம். இதற்கு கட்டணமாக 70 ரூபாய் வசூலிக்கப்படும். இதனை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் தங்கள் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்கலாம்.