குட் நியூஸ்! தமிழகத்தில் இந்த வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள்!

 


தமிழகத்தில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் – கரூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில், சேலம் – நாமக்கல் – கரூர் உட்பட 4 வழித்தடங்களில், இரட்டை ரயில் பாதைகள் அமைக்க தெற்கு ரயில்வே பணிகளை தொடங்கியுள்ளது.


மக்கள் தொகை அடிப்படையில், முக்கிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்து வரும் , திருச்சி – ஈரோடு, சேலம் – நாமக்கல் – கரூர், கரூர் – திண்டுக்கல், விழுப்புரம் – காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவிற்கு பிறகு பெரும்பாலான ரயில்கள் மக்களின் தேவைகளின் அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதைகள் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் துரிதப்படுத்தப் பட்டுள்ளன.


இந்த வழித்தடங்களில், இரட்டை ரயில்பாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை சமர்பிக்க ஆறு மாதங்கள் ஆகலாம். அதனை பரிசீலித்து ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு தான் இந்த திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.