இன்று வடகிழக்கு பருவமழை தொடக்கம்! நம்ம மாவட்டத்திற்கு கனமழை !

 


தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெரும்பாலான மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்
வட கிழக்கு பருவமழை தமிழகம் புதுவை கேரளாவை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர , தெற்கு கர்நாடக பகுதியில் தொடங்கி உள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்ச மழை அளவு மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் 11 செ.மீ ஆக பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையின் புறநகர் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை , தூத்துக்குடி ராமநாதபுரம் , புதுக்கோட்டை, விருதுநகர் , திருப்பூர் , கரூர், திருவாரூரில் கன மழை பெய்யக்கூடும்


வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டு தமிழகத்தில் வழக்கத்தை போலவே இயல்பான அளவில் இருக்கும் . ஆனால் தற்போது முடிந்துள்ள தென் மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு 48 செ.மீட்டர் பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட 24 செ.மீ அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது