தொடக்க ,நடுநிலை பள்ளிகள் திறப்பு எப்போது?!

 


தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன . அரசின் அறிவிப்பின் படி 9 முதல் 12ம் வகுப்புக்கள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை திறப்பது குறித்து முதல்வரிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் பாடங்கள் மட்டுமல்லாமல் உடற்பயிற்சிக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது அவசியம். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.மேலும் தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் .

9 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஒரு வகுப்பறைக்கு 20 பேர் வீதம் அமரவைக்க வேண்டும் எனவும், இதற்கு 1 முதல் 8ம் வகுப்பு வரையில் உள்ள காலி வகுப்பறைகளை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் ஏற்கனவே அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் என அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டால் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.