பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

 


இந்தியாவில் அக்டோபர் 15ம் தேதி தசரா பண்டிகை கோலாகலாமாக கொண்டாட இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை வடமாநிலங்களில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதன் அடிப்படையில் அங்கு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் தொடர் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் தெலங்கானாவில் அக்.6 முதல் 17வரை 12 நாட்களுக்கு தசரா விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் ஆயுத பூஜை/ சரஸ்வதி பூஜை, விஜய தசமி என 2 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை என்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் நீதிமன்றங்களுக்கு நீண்ட விடுமுறையை அளிக்கப்படும். அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றம் நடப்பாண்டிற்கான தசரா பண்டிகை விடுமுறையை அறிவித்துள்ளது.

அதன்படி அக். 9 முதல் 19 வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக். 12ம் தேதி செவ்வாயில் மட்டும் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும்.இதில் அவசரகால வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதே போல் மதுரையில் அக்.11ல் மட்டும் அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.