வெள்ளத்தில் மிதந்த ஆரம்ப சுகாதார நிலையம்!

 


தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையிலும் கனமழை பெய்தது. இதனால் மதுரை மக்கள் உற்சாகமடைந்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் மதுரையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.மறுபடியும் திடீரென கருமேகங்கள் ஒன்று திரண்டு சிறிது நேரத்தில் தொடங்கிய கனழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. நகரின் முக்கிய இடங்களான பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


நீண்ட நேரம் பெய்த மழையால் மதுரை பைக்காரா பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மருத்துவமனை வளாகம் மற்றும் அறைகளில் வெள்ளம் சூழ்ந்தது. நோயாளிகள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள் அவதி அடைந்தனர்