பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை! தமிழக அரசு!

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது இதனால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாளை செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் திறக்கப்படவுள்ளன. வகுப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும்.


பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம். கொரோனா குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை.1 முதல் 8 வரை பள்ளிகள் செயல்படாத நிலையில், அந்த வகுப்பறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். வகுப்பறையில் முனைக்கு ஒருவர் என ஒரு பெஞ்சில் மொத்தம் 2 மாணவர்களே அமர வைக்கப்பட வேண்டும்

முகக்கவசம் அணிந்து வராத மாணவ மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் புதிய முகக்கவசம் அளித்து அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வர் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடக்கோரி பொதுநலவழக்க்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழங்கு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கமளித்துள்ளார்.