பெண்களுக்கான தனி ரேஷன் கார்டு! தமிழக அரசு அறிவிப்பு!!

 


கணவனாலும், புகுந்த வீட்டினராலும் கொடுமைப்படுத்தப்பட்டு கைவிடப்படும் பெண்களுக்கு இந்த அறிவிப்பு பயனுள்ளதாகவே இருக்கும். தமிழகத்தில் இனி கணவனை இழந்தோ, விவாகரத்து பெற்றோ தனியே வசிக்கும் பெண்களுக்கு தனி ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரேசன் கடைகள் மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கணவனால் நிராந்தரமாக கைவிடப்பட்டவர்கள், மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்கள் இவர்கள் ரேஷன் அட்டைகளில் கணவனின் பெயர் இடம்பெற்றுள்ளது.


இதனால் அவர்களின் பெயரை நீக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முன்வராத காரணத்தினாலும், விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்மந்தப்பட்ட பெண்மணிக்கு குடும்ப அட்டை வழங்க இயலவில்லை. இதனால் அப்பெண்மணியின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்து, எழுத்து மூலமான வாக்குமூலம் பெறலாம். சம்பந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கலாம். தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணி புதிய குடும்ப அட்டைக் கோரும்போது விவாகரத்துச் சான்று பெறாமல் புதிய குடும்ப அட்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.