நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை!! கலெக்டர் அதிரடி உத்தரவு!!

 


தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு வருகின்றன. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பரிசுகள், பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் ஏற்கனவே மதுரையில் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு விதிகளையும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் சரியாக கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.