undefined

அதிர்ச்சி ! பச்சை நிறமாக மாறிய கடல் நீர்!

 


ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாம்பன் பாலம். கடலின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தக் கடல் பகுதியில் இன்று காலை முதலே கடல்நீர் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது.
நேற்றிரவு கீழக்கரை கடற்கரை பகுதியில் ஊதா நிறத்தில் வெளிச்சம் தெரிந்து வருவதால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அச்சத்துடன் திரும்பி வந்தனர்.


பாம்பன், கீழக்கரை பகுதிகளில் கடல் நீர் நிறம் மாறியது குறித்து மத்திய கடல் மண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.